பாரத ரத்னத்தை அவமானப்படுத்தினால் பொறுக்க மாட்டோம் டெண்டுல்கருக்கு ஆதரவு

பாரத ரத்னா விருது பெற்ற டெண்டுல்கரை அவமானப்படுத்தினால் அதை ஹிந்துஸ்தான் பொறுக்காது என்று கூறி மும்பையில் உள்ள டெண்டுல்கரின் வீட்டின் முன் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் திரண்டனர்.மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பிரபல பாப் பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா டியூன்பெர்க் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இவர்களது கருத்துக்குப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் விஷயங்களுக்கு வெளிநாட்டுச் சக்திகள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியும். அதில் பங்காளிகளாக முடியாது. இந்த விஷயத்தில் நம் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று டெண்டுல்கர் டுவிட் செய்திருந்தார். டெண்டுல்கரின் இந்த கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அவரது டிவிட்டர் பக்கத்தில் பலர் கண்டனம் தெரிவித்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இளைஞர் காங்கிரசார் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெண்டுல்கருக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது பாரத ரத்னத்தை அவமதித்தால் இந்துஸ்தான பொறுக்காது என்று கூறி அனைவரும் கோஷம் எழுப்பினர். நாங்கள் சச்சினுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று எழுதப்பட்ட பேனர்களையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். மேலும் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் 'சச்சின் சச்சின்' என்று கோஷம் எழுப்புவது வழக்கம். இந்த கோஷம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அது போலவே டெண்டுல்கரின் வீட்டின் முன் திரண்டவர்களும் 'சச்சின் சச்சின்' என்று கோஷம் எழுப்பினர்.

You'r reading பாரத ரத்னத்தை அவமானப்படுத்தினால் பொறுக்க மாட்டோம் டெண்டுல்கருக்கு ஆதரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவுடன் உடன்பாடு.. ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டு தர மாட்டோம்.. ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்