விமர்சனம் வந்தால் தானே அது ஜனநாயகம்- அடடே இதுவல்லவோ மோடி மேஜிக்!

பிரதமர் மோடி தன்னுடைய லண்டன் பயணத்தில்தான் இந்தியாவில் தனக்கு எழும் எதிர்ப்புகளுக்கு அருமையான ஒரு பதிலை அளித்துள்ளார்.

நாடு கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் போட லண்டன் பயணம் சென்றுள்ளார் பாரதப் பிரதமர் மோடி. மேதகு மோடி உலகம் சுற்றும் வாலிபனாக உலக மக்கள் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருந்தாலும் சொந்த நாட்டு மக்களின் கேள்விகளுக்கு அயல்நாட்டுக்குச் சென்று அருமையான ஒரு பதிலை அளித்துள்ளார்.

'கோழிக்கு கோடிக்கணக்குள தீவனம் வாங்கி வச்சாலும் அது முட்டைதான் போடும், நூத்துக்கு நூறு எல்லாம் போடாது' என கிராம சொல்லாடல் ஒன்று ஊர்பக்கம் புழங்கும். அதுபோலத்தான் இந்திய மக்களும் மாண்புமிகு மோடியும் என லண்டன் புராணம் சொல்கிறது.

பிரதமர் மோடி லண்டன் இந்திய வம்சாவளியினர் உடனான கலந்துரையாடலில் பேசுகையில், "நாட்டில் எதிர்கட்சி ஒன்று இருந்தால் விமர்சனம் வந்தால் தானே அழகு. அதுதான் ஜனநாயகமும் கூட. எனக்கு உங்கள் விமர்சனம்தான் தேவை, முக்கியம்" என களத்தை விட்டுவிட்டு காற்றில் வாள் வீசி வந்துள்ளார்.

இந்திய அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தரவில்லை, பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை என்று குற்றச்சாட்டுக்கும் விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவித் தலைமகனே நாட்டை ஆள்கிறார்.

'ப்ளேன் என்னதான் மேலே மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழ வந்துதானே ஆகணும்', என்ன மக்களே...!

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading விமர்சனம் வந்தால் தானே அது ஜனநாயகம்- அடடே இதுவல்லவோ மோடி மேஜிக்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீங்கள் முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துபவரா..? அப்போ முதலில் இதை கவனியுங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்