நக்சலைட்டுகளுக்கு கிடைத்த காதலர் தின பரிசு... வியக்கவைக்கும் சத்தீஷ்கர் போலீசாரின் செயல்!

சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் தன்டேவாடா சுக்மா நகரங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. நக்சலைட்டுகளால் அவப்போது சட்டவிரோத செயல்களும் நடைபெற்று தான் வருகிறது.

இதற்கிடையே, நக்சலைட்டுகளை பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு உரிய பரிசு தொகையும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்படும். இந்நிலையில், நக்சலைட்டுகளின் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களுடைய ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.

இதனை தொடர்ந்து, நக்சலைட்டுகள் புதிய வாழ்க்கையை தொடங்க சரணடைந்த 15 பேருக்கு காதலர் தினத்தில் நேற்று தன்டேவாடா போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக தன்டேவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறுகையில், அனைவர் மீதும் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை பிடித்து தருபவர்கள் அல்லது இவர்களது இருப்பிடம் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு உரிய பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களில் ஆயுதங்களை கைவிட்டு 15 பேர் சரணடைந்தனர். தொடர்ந்து, நேற்று அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

You'r reading நக்சலைட்டுகளுக்கு கிடைத்த காதலர் தின பரிசு... வியக்கவைக்கும் சத்தீஷ்கர் போலீசாரின் செயல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய கொள்கை விவகாரம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்