லவ் ஜிஹாத்தை நிச்சயம் எதிர்ப்பேன்.. மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!

கேரளாவில் லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்கள் ஏமாற்றப்படுவதாக பாஜகவில் இணையவுள்ள மெட்ரோ மேன் ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மெட்ரோ மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் தன்னை பாஜகவில் நாளை இணைத்துக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆளுநர் ஆகும் விருப்பம் இல்லை. ஆனால், எதிர்வரும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இ.ஸ்ரீதரன், லவ் ஜிஹாத் குறித்து பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் லவ் ஜிஹாத் மூலம் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறேன். கேரளாவில் உள்ள இந்து பெண்கள், திருமணத்தின் மூலம் ஏமாற்றப்படுவதை நேரில் பார்த்து வருகிறேன். ஒரு திருமணத்தில் இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்க்கிறேன்.

அதனால்தான் லவ் ஜிஹாத் என்ற கருத்தை எதிர்க்கிறேன் என்றார். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ சிறுமிகளும் லவ் ஜிஹாத் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, அந்த மாதிரியான ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக எதிர்ப்பேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மாட்டு இறைச்சி குறித்து பேசிய இ.ஸ்ரீதரன், தனிப்பட்ட முறையில், நான் மிகவும் கண்டிப்பான சைவ உணவு உண்பவன். நான் முட்டைகளை கூட சாப்பிடுவதில்லை, நிச்சயமாக யாரும் இறைச்சி சாப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீதரன் அரசியல் வருகை குறித்து பேசுகையில், நான் ஆரம்பத்தில் இருந்தே பாஜக அனுதாபியாக இருந்தேன். குறிப்பாக நான் ஒரு மாணவனாக இருந்தபோது, ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டேன். இயற்கையாகவே நான் பாஜக கொள்கை எண்ணத்தில் வளர்ந்தவன். பாஜகவினர் நேர்மையானவர்களாகவும், இரக்கத்துடன் நாட்டிற்காகவும் உழைக்கும் மக்கள். அதனால்தான் இயற்கையாகவே எனது விருப்பம் பாஜகவாக இருந்தது.

ஆளுநராக வேண்டும் என்று கட்சியில் சேரவில்லை. அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டாலும் ஆளுநராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் முதல்வர் பதவி குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும். நான் முதல்வர் முகமாக திட்டமிடப்பட்டால், கேரளாவின் இரு முனைகளிலும் மகிழ்ச்சியற்ற ஒரு பெரிய குழு நிச்சயமாக எங்களுடன் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெரிய புரட்சி இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading லவ் ஜிஹாத்தை நிச்சயம் எதிர்ப்பேன்.. மெட்ரோ மேன் ஸ்ரீதரன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.. தேர்தலில் வாய்ஸ் தர கேட்டாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்