பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் - முதலிடம் பிடித்த பாஜக!

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்

பெண்களுக்கு எதிராக பாஜகவினர்தான் அதிக குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தேர்தல் குறித்து ஆராய்ந்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 4,845 அரசியல்வாதி விவரங்களை இந்த அமைப்பு சோதனை செய்திருக்கிறது. இதில் 768 எம்பிக்கள், 4,077 எம்எல்ஏக்கள் பற்றிய விவரம் அடங்கும். தகவல் தவறாக கொடுத்தவர்களின் விவரம் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அந்த ஆய்வின் முடிவில், பாஜகவினர் பெண்களுக்கு எதிராக நிறைய வன்முறைகளை செய்து வருக்கிறார்கள். வன்புணர்வு செய்தல், கடத்தல், கொலை இதில் அடக்கம். பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து மிரட்டுதல், வரதட்சணை, பாலியல் சீண்டல் போன்ற புகார்களில் சிக்கியுள்ளார்கள்.

பட்டியலில் பாஜகவிற்கு நெருங்கிய அமைப்பான சிவ சேனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அது, பெண்களுக்கு எதிராக மொத்தம் 7 குற்றங்களைச் செய்துயுள்ளது. மூன்றாம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதில் 4 பேர் குற்றம் செய்துள்ளனர். இந்த பட்டியலில் தென்னிந்திய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் - முதலிடம் பிடித்த பாஜக! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எங்களின் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது - டி.டி.வி.தினகரன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்