100 கோடி - 24 வயது... ஒரு துறவியின் கதை

ஒரு துறவியின் கதை

குஜராத் மாநிலம், பனக்சந்தா மாவட்டம், தீசா நகரை பூர்வீகமாக கொண்டவர் சந்தீப் சேத்.

தற்போது மும்பை பட்டணத்தில் வசிக்கும் இவர் அலுமினியம் சார்ந்த பெருந்தொழிலதிபர். இவரது தொழில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ளது. ஜெயின் என்னும் சமண சமயம் சார்ந்தவர்.

இவரது மூத்த மகன் மோக்சேஷ் சேத்துக்கு 24 வயதாகிறது. சார்ட்டட் அக்கவுண்டண்ட் என்னும் பட்டய கணக்கர் படிப்பில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். இரண்டு ஆண்டுகள் வணிகத்தை கவனித்த மோக்சேஷ் சேத், குஜராத், அஹமதாபாத்தில் நடந்த விழாவில், சமண துறவியானார்.

படிப்பு, குடும்பம், சொத்து எல்லாற்றையும் விட்டு துறவு பூண்ட மோக்சேஷ் சேத், இனி 'கருணாபிரேம்விஜய்ஜி' என்ற பெயரால் அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சூரத்தை சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரி ஒருவரின் மகனான பாவ்யா ஷா தனது 12 வயதில் துறவு பூண்டுள்ளார்.

You'r reading 100 கோடி - 24 வயது... ஒரு துறவியின் கதை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் - முதலிடம் பிடித்த பாஜக!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்