நாடாளுமன்றம் முடங்கினால் மோடிக்கு மகிழ்ச்சி தான் - யஷ்வந்த் சின்ஹா அதிருப்தி

வாஜ்பாய் எவ்வளவு செலவானாலும் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஆனால், பிரதமர் மோடி நாடாளுமன்றம் செயல்படாவிட்டால் மகிழ்ச்சி அடைகிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் எவ்வளவு செலவானாலும் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்; ஆனால், பிரதமர் மோடி நாடாளுமன்றம் செயல்படாவிட்டால் மகிழ்ச்சி அடைகிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி மன்ச் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய யஷ்வந்த் சின்ஹா, “அனைத்துக் கட்சி அரசியலில் இருந்தும் நான் விடைபெற்று அரசியலில் துறவறம் செல்கிறேன்; இனிமேல் எந்தவிதமான அரசியல் கட்சிகளிலும் நான் சேரப்போவதில்லை. பாஜக-விலிருந்தும் இன்று முதல் நான் விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் அப்போது, “பிரதமராக இருக்கும் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது. இதற்கு முன்பிருந்த பிரதமர் வாஜ்பாய் எவ்வளவு செலவானாலும் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், தற்போது இருக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றம் செயல்படாவிட்டால் மகிழ்ச்சி அடைகிறார்; நாடாளுமன்றம் முடங்கினால், எதிர்க்கட்சிகளுடன் பேசி அதற்கான தீர்வை தேட மறுக்கிறார்” என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நாடாளுமன்றம் முடங்கினால் மோடிக்கு மகிழ்ச்சி தான் - யஷ்வந்த் சின்ஹா அதிருப்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுமிகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை அவசர சட்டம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்