தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டருக்கு கொரோனா

இமாச்சல பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது இரத்த மாதிரி பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட உள்ளது.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ளது நகரன் சோலன். இங்குள்ள மண்டல மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஜனவரி 15ம் தேதி, மாவட்டத்தில் முதலாவதாக தடுப்பூசி போட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக்கொண்டார். இரண்டாவது டோஸ் போட்ட பிறகு 27 நாள்கள் கழித்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தை அறியும்படியும், உருமாறிய கொரோனா கிருமி உள்ளதா என்பதை அறியும்படியும் அவரது சோதனை மாதிரிகள் மும்பைக்கு அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி முக்தா ராஸ்டோகி தெரிவித்துள்ளார்.

You'r reading தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டருக்கு கொரோனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதயம் வீங்குவதற்கு இதுதான் காரணம்: அதை தவிர்க்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்