இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் பாதிப்பு

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 35,871 பேருக்கு நோய் பாதித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, சீனாவில் இருந்து கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று தினமும் 70 ஆயிரம், 90 ஆயிரம் பேருக்கு பரவியது. இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படத் தொடங்கியது. மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. நேற்று(மார்ச்17) ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 35,871 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், இது வரை மொத்தம் ஒரு கோடி 14 லட்சத்து 74,605 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து விட்டனர். தற்போது 2 லட்சத்து 52,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்தால் இது வரை ஒரு லட்சத்து 59,216 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் தற்போது வரை கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் நேற்று 23,179 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினமும் புதிதாக நோய் பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கும் கீழ் சென்றிருந்தது. ஆனால், ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து வந்து நேற்று மட்டும் 945 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 5,811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You'r reading இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்