டெலிவரி பாய்கள் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.. ஸ்விக்கியின் சூப்பர் முடிவு!

தங்கள் நிறுவனத்தி வேலை பார்க்கும் உணவு டெலிவரி பாய்கள் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆகும் செலவினை ஏற்றுக்கொள்வதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.

முதல்கட்டமாக 45 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று ஸ்விக்கி முடிவு செய்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு முன்னுரிமை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஸ்விக்கி சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார்.

தங்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதனால் ஏற்படும் வருமான இழப்பினையும் ஈடுகட்ட முடிவு செய்துள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார். ஸ்விக்கியின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

You'r reading டெலிவரி பாய்கள் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.. ஸ்விக்கியின் சூப்பர் முடிவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேளதாளம், குத்தாட்டம்.. நாற்று நட்டு, காய் விற்று.. வேட்பாளர்களின் நடிப்புகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்