புதுச்சேரியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு.. தமிழிசை அதிரடி!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மட்டும் 11 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது கொரோனா பாதிப்பு. பல மாநிலங்களின் நிலையும் இது தான்.

இதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதேபோல் புதுச்சேரியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். மேலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழிசை அறிவித்துள்ளார்.

You'r reading புதுச்சேரியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு.. தமிழிசை அதிரடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `மினி ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு.. CRISIL அறிக்கை சொல்வது என்ன?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்