ரியல் ஹீரோ மயூர்... வைரல் போட்டோவும்.. உதவி பின்னணியும்!

நேற்று மும்பை வாங்கனி ரயில்நிலையத்தில் பார்வையிழந்த பெண் ஒருவரின் 6 வயது மகன் தண்டவாளத்தில் தவறி விழ எதிரே ரயில் வேகமாக வந்துக்கொண்டு உள்ளது. பார்வையற்ற பெண் என்ன நிகழ்ந்தது எனத்தெரியாமல் கதற அங்கு பணிபுரிந்த பாயிண்ட்ஸ் மேன் மயூர் செல்கே ஒரு கணம் யோசித்து விறு விறு வென ஓடி அந்த சிறுவனை தூக்கி ப்ளாட்பாரத்தில் ஏற்றி, தானும் ஏறுகிறார். ரயில் கடக்கிறது.

ஒரு விநாடி தாமதம் ஆனாலும் நிலைமை விபரீதம். சமதளங்களில் ஓடுவது போல ரயில்வே ட்ராக்களில் ஓடுவது மிகச்சிரமம். ஸ்லீப்பர்கள் , கற்கள் தட்டப்பட்டு கீழே விழ வாய்ப்பு மிக அதிகம். ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார்.

இந்த் வீடியோ காட்சிகள் வெளியாக மயூர்-க்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமைச்சர் பியூஸ் கோயல் அவரை அழைத்து பேசி பாராட்டினார். இதேபோல் அவரது அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

You'r reading ரியல் ஹீரோ மயூர்... வைரல் போட்டோவும்.. உதவி பின்னணியும்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 35 வருடங்கள் முன்பு இதே நாளில் நடந்த சம்பவம்.. கம்யூனிஸ்ட் தோழர் பகிர்ந்த சுவாரஸ்யம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்