மோடியுடன் ட்விட்டரில் மல்லுக்கட்டிய கர்நாடக முதல்வர்..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியுடன் ட்விட்டரில் மல்லுக்கட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகளுக்கு இடையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக களத்தில் நேரடி போட்டியில் இருக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மத்தியில் எல்லா தளங்களிலும் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `சித்தராமையாவின் அரசு செய்த சாதனைகளை எந்த காகிதத்தையும் பார்க்காமல் 15 நிமிடம் பேசுமாறு ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்.

ஹிந்தி, ஆங்கிலம், அல்லது அவரது தாய் மொழியில் கூட இதை ராகுல் பேசலாம்’ என்று கலாய்க்கும் தொனியில் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா, `அன்பிற்குறிய மோடிஜி, எடியூரப்பாவின் அரசு செய்த சாதனைகள் குறித்து எந்த காகிதத்தைப் பார்த்து வேண்டுமானாலும் 15 நிமிடம் பேசுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனால், #SiddaramaiahRocks என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மோடியுடன் ட்விட்டரில் மல்லுக்கட்டிய கர்நாடக முதல்வர்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'அமெரிக்காவின் க்ரீன் கார்டு வேண்டுமா..?'- விண்ணப்பங்களை வரவேற்கும் காக்னிசென்ட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்