மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு- ஃபுல் ஃபார்மில் சித்தராமையா

பிரதமர் மோடி தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி அவதூறு வழக்குப் பதிந்துள்ளார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.

கர்நாடக மாநில பொதுத் தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகளுக்கும் இடையிலான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக களத்தில் நேரடி போட்டியில் இருக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மத்தியில் பலதரப்பிலான தளங்களிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `சித்தராமையாவின் அரசு செய்த சாதனைகளை எந்த காகிதத்தையும் பார்க்காமல் 15 நிமிடம் பேசுமாறு ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்’ எனப் பேசினார்.

இதையடுத்து சித்தராமையாவும் பதிலுக்குப் பதில் அடி கொடுத்துக்கொண்டே இருந்தார். மோடியும் எடியூரப்பாவும் தொடர்ந்து சித்தராமையாவைத் தாக்கியே பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை சித்தராமையா எழுத்துப்பூர்வமாக மோடிக்கும் எடியூரப்பாவுக்கும் நேரடியாக விவாதிக்கத் தயாரா என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தொடர்ந்து விடாத சித்தராமையா, தற்போது மோடி, ‘என் மேல் தகுந்த ஆதாரங்கள் அற்ற தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை மோடி பெசி வருகிறார்’ என சித்தராமையா அவதூறு வழக்குப் பதிந்து மோடிக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு- ஃபுல் ஃபார்மில் சித்தராமையா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது - உத்தவ் தாக்கரே

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்