வாக்குப்பதிவு நேரத்தில் நேபாள கோயிலில் மோடி! விதிமுறை மீறல்!

இன்று கர்நாடகா பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில் நேபாளம் கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்து வருகிறார்.

கர்நாடகா மாநிலப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிரது. ஒரு மாத கால ஆர்ப்பாட்டமும் பிரச்சாரமும் நிறைவுற்று நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, இன்று நேபாளத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வருகிறார். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோடியின் திடீர் சாமி தரிசனம் குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், “கர்நாடகா தேர்தலில் மக்கள் தீர்ப்பு குறித்த பயம் ஏற்பட்டதால் தானே மோடி இப்படி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்” என கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கேலாட் கூறுகையில், “கர்நாடகா பொத்துத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வரும்போது இதுபோல் மோடி பொதுவெளியில் சாமி தரிசனம் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். மேலும், மக்களின் கடைசி நேர அனுதாபங்கள் கிடைக்கும் என மோடி நினைப்பதெல்லாம் அபத்தம்” என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வாக்குப்பதிவு நேரத்தில் நேபாள கோயிலில் மோடி! விதிமுறை மீறல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - '2019- ராகுல் பிரதமரா?’- கலாய்த்த மம்தா பானர்ஜி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்