பாஜக-வுக்கு இடம்பெயர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ! மேலும் ஒருவர் மாயம்!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற இரண்டு எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியைக் கைவிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்- மஜத கூட்டணி வைத்தன. மஜத தலைவர் குமாரசாமி, முதல்வராக பொறுப்பேற்க ஆளுநரிடம் விண்ணப்பம் கொடுத்தார். அதேபோல பாஜக-வின் எடியூரப்பாவும் கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இறுதியில் கவர்னர், எடியூரப்பாவுக்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஆனந்த் சிங், `அமலாக்கத்துறையில் எனக்கு எதிராக இருக்கும் வழக்கை வைத்து என்னை பாஜக-வினர் மிரட்டுகின்றனர். என்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’ என்று இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ என்னிடம் கூறினார்’ என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

ஆனால், தற்போது இந்த ஆனந்த சிங் கட்சி தாவிவிட்டார். இவர் கடந்த 2017 டிசம்பர் வரையில் பாஜக உறுப்பினர் என்பது கூடுதல் தகவல். மேலும் பிரதாப் கெளடா என்ற எம்.எல்.ஏ எங்குள்ளார் என யாருக்கும் தெரியவில்லை.

கூவத்தூர் போலவே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தீவிர கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாஜக-வுக்கு இடம்பெயர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ! மேலும் ஒருவர் மாயம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகா தேர்தல் எதிரொலி- பெட்ரோல் விலை சுமார் 5 ரூபாய் உயருமாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்