சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - நொய்டா மாணவிnbspமுதலிடம்

நொய்டா மாணவி மேக்னா முதலிடம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நொய்டா மாணவி மேக்னா இந்த தேர்வில் 499 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 498 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவியர் 12-ம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதில், 83.01 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - நொய்டா மாணவிnbspமுதலிடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கனடாவிலுள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்