வெறும் இரண்டு சதவிகித ஊதியமா?- கொதிக்கும் வங்கி ஊழியர்கள்!

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இரண்டு நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மக்கள் பயனடைந்தார்களா... இல்லையா' என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை' பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி, தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள் என மத்திய அரசு அறிமுகப்படுத்தும் அனைத்துத் திட்டங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது வங்கி ஊழியர்கள்தான்' எனக் குமுறுகின்றனர் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர்.

மேலும், ஊதியத்துக்கு ஏற்ற உயர்வு வேண்டும் எனவும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வங்கி ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2 சதவிகித ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஊதிய உயர்வு போதாது என வங்கி ஊழியர்கள் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎம்-களிலும் பணம் எடுக்க முடியாத சூழலில் மக்கள் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வெறும் இரண்டு சதவிகித ஊதியமா?- கொதிக்கும் வங்கி ஊழியர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வளர்ச்சி விகிதத்தில் வளரும் இந்தியப் பொருளாதாரம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்