நாட்டின் முக்கிய மாநிலங்களில் பந்த்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இணைந்து நாட்டின் ஏழு முக்கிய மாநிலங்களில் 10 நாள்கள் பந்த் அறிவித்துள்ளனர்.

முதல் நாள் போராட்டமான இன்று, பல்லாயிரம் லிட்டர்கள் கொண்ட பால்-ஐ சாலையில் ஊற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரள மற்றும் ஜம்மூ & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, கொள்முதலுக்கு தகுந்த விலை, நிரந்தரமான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த 10 நாட்கள் போராட்டம் நடக்க உள்ளது. இந்தப் போராட்டத்தின் போது, எந்த சாலை மறியலிலும் விவசாயிகள் ஈடுபடப் போவதில்லை. மாறாக, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டப் போகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ராஷ்டிரிய கிசான் மகாசங் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்புடன் 130 விவசாய அமைப்புகள் இணைந்து நெடும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 7 மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்ற ஆண்டு, ஜூன் மாதம் 6 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்தின் மண்டசுர் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 7 பேர், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும் இந்தப் போராட்டம் நடத்தபடுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நாட்டின் முக்கிய மாநிலங்களில் பந்த்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது!'- அமைச்சர் தங்கமணி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்