பஞ்சரான இந்திய பொருளாதாரம் - முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

பஞ்சரான இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களைக் கொண்ட கார் போல் மிகவும் பரிதாபமாக காட்சி அளிப்பதாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பொருளாதார கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசி அவர், முதலீடு, நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசு செலவுகள் பொருளாதாரத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றார். இதில் ஏதேனும் ஒன்று இரண்டு பஞ்சரானாலும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் மூன்று சக்கரங்கள் பஞ்சராகி உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். தற்போது அரசு செலவினங்கள் என்ற ஒற்றை சக்கரத்தில்தான் பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் அண்மை காலத்தில் எந்த முதலீடும் இல்லை என்று சுட்டிக்காட்டிய சிதம்பரம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்களை பாதிப்புகுள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பஞ்சரான இந்திய பொருளாதாரம் - முன்னாள் நிதி அமைச்சர் கருத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலிபோர்னியா தேர்தல் - களம் காணும் இந்திய வம்சாவளி இளைஞர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்