விவசாயிகளைக் கொன்றவர் மோடி!- ஆத்திரத்தில் ராகுல்!

மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான பிரச்சாரத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்தியபிரதேசத்தின் மண்டாசூர் நகரில் கொடி ஏற்றி துவக்கி வைத்தார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

மண்டாசூர் நகரில் ராகுல் காந்தி பேசுகையில், “நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றாமல் தன் பணியிலிருந்து தவறியது நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு. கடந்த ஆண்டு நாட்டின் மிக நீண்ட போராட்டமாகக் கருதப்பட்ட மண்டாசூர் நகர விவசாயிகளை போலீஸார் மூலம் சுட்டுப் படுகொலை செய்தது மோடி தலைமையிலான அரசு” எனக் கொந்தளித்தார்.

இந்த சமயத்தில்தான் இன்றைய பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, “விவசாய பயிர்களுக்கு நல்ல விலை கேட்டும், விவசாய கடன் தளுபடி கேட்டும் தொடர் கோரிக்கைகளை வைத்து வரும் விவசாயிகளை கைவிட்டு விட்டார் பிரதமர் மோடி.

‘மேக் இன் இந்தியா’ என்ற மோடியின் திட்டம் படு தோல்வி அடைந்துள்ளது. இங்கு எல்லாமே சீனா தான். சீனத் தயாரிப்புகள் தான் இந்தியா முழுக்க ஆக்கிரமித்து உள்ளது. சீன ராணுவம் டோக்லாம் பகுதியில் நுழைந்த போது கூட பிரதமர் வாயைக்கூடத் திறக்கவில்லை” எனக் கடுமையாக பாஜக-வைத் தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading விவசாயிகளைக் கொன்றவர் மோடி!- ஆத்திரத்தில் ராகுல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிம்பு விரக்தியில் பேசி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்