ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் ஏலம் விட அரசு முடிவு!

ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரே அடியாக இழுத்து மூடாமல் இருப்பதைத் தவிர்க்க அந்நிறுவனத்தை ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஏலம் விட்டது.

இதற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. ஏர் இந்தியா, கடந்த சில காலங்களாக நஷ்டத்தில் இயங்குவதால் அந்த நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏறக்குறைய 5 பில்லியன் டாலர் கடன் உள்ளது.

இந்நிலையில், விற்பனை விதிகளில் மாற்றம் செய்து மீண்டும் ஏல அறிவிப்பை வெளியிட அரசு முடிவு எடுத்துள்ளது. கடனையும் புதிதாக ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான், அது ஏலத்தில் எடுக்கபடவில்லை என்று விவரம் அறிந்த நபர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

விரைவில், நிறுவனம் விற்பனையானால் அதை வாங்குபவருக்கு சர்வதேச அளவில் 2,500 விமான நிலையங்களிலும், உள்நாட்டு முனையங்களில் 3,700 நிலையங்களிலும் இடம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வாங்குபவர்க்கு கடன் வசதி செய்து தரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

மத்திய அரசு இந்நிறுவனத்தை இழக்குமானால் அது மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சியாகவும், மோடியின் தனியார்மயமாக்கல் திட்டத்துக்கு ஏற்படும் நஷ்டமாகவுமே பார்க்கப்படும்.

 

 

You'r reading ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் ஏலம் விட அரசு முடிவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்