ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் மொழியை நீக்கவில்லை- ஜவடேகர்

’சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை நீக்கவில்லை’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி தமிழ் மொழி இடம்பெறாது எனத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக திமுக எம்.பி கனிமொழி, “மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகளை நீக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, கூட்டாட்சி தத்துவத்துக்கு விடப்பட்டுள்ள நேரடி சவாலாகும்” என தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்நிலையில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளிக்கையில், “தமிழ் உள்ளிட்ட மொழிகளை தகுதித் தேர்வுகளில் இருந்து நீக்க முடிவு இல்லை. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்த சிபிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

You'r reading ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் மொழியை நீக்கவில்லை- ஜவடேகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னையே இல்லை!- தேவ கெளடா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்