நில மோசடி... முன்னாள் முதல்வர் மீது வழக்கு

சித்தராமையா உள்பட 4 பேர் மீது மைசூர் காவல்துறை வழக்கு பதிவு

மைசூர் நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட 4 பேர் மீது மைசூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 1997-ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த சித்தராமையா, நில மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது முறைப்படி எப்ஐஆர் பதிவு செய்து வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என கங்கராஜ் என்பவர் மைசூர் நகர நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மைசூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி சித்தராமையா மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மைசூர் லட்சுமிபுரம் காவல்நிலையத்தில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக நிலம் வாங்குவது, ஏமாற்றுவது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

You'r reading நில மோசடி... முன்னாள் முதல்வர் மீது வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ப.சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்