ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பு: மார்ச் 31 வரை காலக்கெடு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதன் முதலில் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அதுவும் முடியாமல் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. 

இருந்தும் ஆதார் எண் மற்றும் பான் எண் இணைப்பை மக்கள் பலரும் செய்து முடிக்காததால் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி இறுதிக்கட்ட கால நீட்டிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.

You'r reading ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பு: மார்ச் 31 வரை காலக்கெடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிரம்ப்புக்கு எதிர்ப்பு - பிரமிளா ஜெயபால் உட்பட 500 பெண்கள் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்