டெல்லி தற்கொலை விவகாரம்- மூட நம்பிக்கையால் பலியான குடும்பம்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் தூக்கிட்டு உயிரிழிந்துள்ளனர். அவர்களின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டுள்ளது. மர்மமான முறையில் 9 பேர் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டுள்ளன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்தார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார்.

மரணம் அடைந்திருந்த அனைவரும் 15 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். நேற்று வெளியான பிரேத பரிசோதனை முடிவுகளும் அவர்களின் மரணம் தூக்கிட்டு செய்துகொண்ட தற்கொலை தான் என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில், ’பத் பூஜா’ என்ற மத நம்பிக்கையின் காரணமாக அந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. பிரேத பரிசோதனையில் 11 பேரும் உயிர் பிரியும் வேளையில் எந்தவொரு கஷ்டமும் அனுபவிக்கவில்லை. தாமாக முன்வந்து நிதனமாக பக்தி என்ற பெயரில் ஒரு சடங்கு முறையாக இந்தத் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர் என்பது விசாரணையில் வெளியாகி உள்ளது.

You'r reading டெல்லி தற்கொலை விவகாரம்- மூட நம்பிக்கையால் பலியான குடும்பம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மழை வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட சேலம் மாணவன் சடலமாக மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்