ராமாயண மாதத்தை கொண்டாடும் கேரள அரசு!

ராமாயண மாதம் கொண்டாட கேரள மாநில அரசு முடிவு

நடப்பாண்டு முதல் ராமாயண மாதம் கொண்டாட கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மலையாள காலண்டரின் கடைசி மாதமான கார்கீடகம் மாதம் ஜூலை 17-ஆம் தேதி துவங்குகிறது. இந்த மாதத்தில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் ராமாயண கதைகள் கூறப்படுவது வழக்கம். இதனால் மழைகாலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

இதனையடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை, ராமாயண மாதமாக கொண்டாட பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சமஸ்கிருத சங்கம் மூலம் ராமாயண சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமாயண மாதம் கொண்டாடுவதற்கும், இடது சாரிகளின் கட்சி கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

You'r reading ராமாயண மாதத்தை கொண்டாடும் கேரள அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்