சமையல் எரிவாயு மானியம் இல்லை.. இனி சமையல் மானியம் - அரசு பரிந்துரை

சமையல் எரிவாயு மானியம் இல்லை.. இனி சமையல் மானியம்

சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்கிவிட்டு அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் பெற்று வருகின்றனர். இந்த மானியம் எல்.பி.ஜி. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

நாட்டின் பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் எரிவாயுவைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதைப் போலவே பலர் இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். இவர்களும் சமையல் எரிவாயு மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க அரசு பரிந்துரை செய்துள்ளது..

இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக இனி ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த பரிந்துரையை செயல்படுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், “எல்பிஜி என்பது தனிப்பட்ட தயாரிப்பு. இதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எரிபொருளுக்கும் மானியம் வழங்க வேண்டும்” என்றார்.

You'r reading சமையல் எரிவாயு மானியம் இல்லை.. இனி சமையல் மானியம் - அரசு பரிந்துரை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம்: ஆதரவளிக்கும் ரஜினிகாந்த்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்