இன்று மிக முக்கியமான நாள் - பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

நாடே நம்மை உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது - மோடி

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள் என்று டுவிட்டரில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்று பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாடாளுமன்ற ஜனநயாகத்தில் இன்று மிக முக்கியமான நாள்.

இன்று நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் அமளியின்றியும் நடைபெறும் என நம்புகிறேன்.

இதற்காக, மக்களுக்கும் அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நாடே, நம்மை உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading இன்று மிக முக்கியமான நாள் - பிரதமர் நரேந்திர மோடி டுவிட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாநில அந்தஸ்து... புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்