நல்லவர்களின் பேச்சைக் கேளுங்கள் மோடி- ப.சிதம்பரம் தெளிவுரை

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உண்மையை பேசும் நபர்களின் வாதங்களை கவனிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர்களான அரவிந்த் பனகாரியா, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் சமீபத்தில் சொன்னக் கருத்துகளை மேற்கோள் காட்டி சிதம்பரம், அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிதம்பரம், ‘முதலாவதாக அரவிந்த் பனகாரியா, ‘இறக்குமதிக்கு மாற்று’ என்ற அரசின் திட்டம் குறித்தும், அரசின் வர்த்தக கொள்கைகள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார். இரண்டாவதாக ரகுராம் ராஜன், மாற்றுக் கருத்துகளை வரவேற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் நாம் அறிவார்ந்த சமூகமாக மாற முடியும் என்றொரு கருத்தை சொல்லியிருக்கிறார். மூன்றாவதாக அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார ஆலோசகர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அவரிடம் எந்தவித கருத்தும் கேட்வில்லை என்பது குறித்து மன வருத்தம் இருக்கும்’ என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அரவிந்த் பனகாரியா, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘அரசின் வர்த்தக கொள்கைகள்’ குறித்து விரிவாக எழுதியுள்ளார். இதைத்தான் சிதம்பரம் மேற்கோள் காட்டியுள்ளார். 

You'r reading நல்லவர்களின் பேச்சைக் கேளுங்கள் மோடி- ப.சிதம்பரம் தெளிவுரை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓபிஎஸ் மீதான விசாரணையை துரிதப்படுத்துங்கள்!- நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்