26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இடுக்கி அணை- துரிதமாகும் கேரளா!

26 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்ப உள்ளதால் அணையை ஒட்டியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெறச் செய்து வருகிறது கேரள அரசு.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணை தற்போது தனது முழு கொள்ளவான 2,403 அடியை எட்ட உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் 120 அடி கொள்ளவு கொண்ட தமிழகத்தின் மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து மேட்டூர் அணை அருகிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், முழு கொள்ளவை எட்ட உள்ள இடுக்கி அணையிலிருந்து விரைவில் நீர் திறக்க ஏற்பாடு செய்துவரும் கேரள அரசு தற்போது அணையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆற்றுப் பகுதியின் அருகே வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியைச் செய்து வருகிறது.

You'r reading 26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இடுக்கி அணை- துரிதமாகும் கேரளா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரு பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய் - விழுப்புரத்தில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்