ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்து விபத்து - எஸ்.ஐ உள்பட 3 பேர் பலி

ஆந்திராவில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நூல் மாவட்டம் ஜோகாபுரத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனா தனது சகோதரர் ராஜசேகருடன் ஜோகாபுரம் குப்பை கிடங்கு அருகே உள்ள மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை அளந்து எல்லைக்கல் நடுவதற்காக அங்கு சென்றனர்.

நில அளவீடு செய்ய சர்வேயர் வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது குப்பை மேட்டில் இருந்து தங்கள் நிலத்தில் வந்து விழுந்து கிடந்த குப்பைகளை சேகரித்து குப்பை மேட்டில் கொட்டி தீ வைத்தனர்.

அப்போது குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதமாக வெடித்து மல்லிகார்ஜூனா, ராஜசேகர் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் உடனிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆய்வாளர் சீனு படுகாயம் அடைந்தார்.

நந்திகொட்கூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்த கர்னூல் எஸ் பி பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

You'r reading ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்து விபத்து - எஸ்.ஐ உள்பட 3 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - DMK Chief M. Karunanidhi's Photo released - People Overwhelmed

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்