கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப்பாண்டவர்

கேரளாவுக்கு உலக மக்கள் துணை நிற்க வேண்டும் - போப்

மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மிகப்பெரிய இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கேரளாவின் இந்த துயரச் சம்பவம் சர்வதேச மக்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் கேரள மக்களுக்கு உதவ உலக மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர், “கனமழை காரணமாக கேரளா மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. மழையில் சிக்கியும், நிலச்சரிவாலும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள சகோதர, சகோதரிகளுக்கு சர்வதேச சமுதாயம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அங்கு தேவைப்படும் அனைத்து உதவிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

You'r reading கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப்பாண்டவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளம் புகுந்த மாவட்டங்களுக்கு குடிநீர் தரப்பட வில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்