ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்

ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டு.. காங்கிரஸ் மறுப்பு

வாராக்கடன் அதிகரிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

நாட்டில் வாராக்கடன் அதிகரித்தற்கான காரணம் குறித்து நாடாளுமன்ற மதிப்பீட்டு குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், வாராக்கடன் 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரித்ததற்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நடந்த நிலக்கரி உள்ளிட்ட ஊழல்களே காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.

கடன் வசூல் தீர்ப்பாயங்களே செயல்பாடு மந்த நிலையில் இருந்தது. சராசரியாக ஒரு வழக்கில் தீர்வு காண்பதற்கு 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக ரகுராம் ராஜன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா, "2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த போது, வாராக்கடன் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாகும். தற்போது, அது 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 9 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக வாராக்கடன் அதிகரித்துள்ளது."

“பிரதமர் அலுவலகத்திற்கு 2016ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகி சென்ற போது வாராக்கடன்கள் அளவு 2.83 லட்சம் கோடி என்றும் எஞ்சிய 9.17 லட்சம் கோடிக்கு பிரதமர் மோடியின் அரசே பெறுப்பு" எனக் கூறியுள்ளார்.

You'r reading ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிஜாமின் தங்க டிபன் பாக்ஸ் திருட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்