பாஜக எம்.பி கால்களை கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்

எம்.பி கால்களை கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்

ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக எம்.பியின் கால்களைக் கழுவி, அந்த நீரை தொண்டர் குடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மேடையில் எம்.பி. இருந்தபோது, அக்கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தார்.

இந்த நிகழ்வு கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், பொதுமக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், இந்த நிகழ்வை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அரசியல் கட்சியினர் பலர் இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி நிஷிகாந்த் துபேயின் இந்த செயல், அக்கட்சியின் மீதான நன்மதிப்பு குறைக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி நடந்த மழைக்கால கூட்டத் தொடரில், பரபரப்பு உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் பிரதமரை கட்டிப்பிடித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.வி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தி எங்களைக் கட்டிப்பிடித்துவிடுவாரோ எனப் பயந்துபோய் இருக்கிறோம், கட்டிப்பிடித்துவிட்டால், எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து செய்துவிடுவார்கள் என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக எம்.பி கால்களை கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எச்.ராஜாவுக்கு சீமான் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்