குஜராத்தில் 12 சிங்கங்கள் உயிரிழப்பு- விசாரணைக்கு உத்தரவு

குஜராத்தில் 12 சிங்கங்கள் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறத்தாழ 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

அழிந்து வரும் விலங்கினங்கள் பட்டியலில் ஆசிய சிங்கங்கள் 2000ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. 2015ம் ஆண்டில் கிர் சரணாலயத்தில் 521 ஆசிய வகை சிங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தன. 2016ம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவற்றுள் 10 சிங்கங்கள் மடிந்து விட்டன.

கடந்த 10 நாட்களில் குட்டிகள் உள்பட 12 சிங்கங்கள் இறந்துள்ளன. விஷமருந்திய பன்றி ஒன்றை உண்டதால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. மேலும் எட்டு சிங்கங்கள் நுரையீரல் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட நோய் தொற்றினால் மரணமடைந்துள்ளன. சண்டையிட்டதில் மூன்று சிங்கக்குட்டிகளும், சிகிச்சை பெற்ற நிலையில் மூன்று குட்டிகளும் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த சிங்கங்களின் சடலங்கள் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சிங்கங்களின் உயிரிழப்பு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading குஜராத்தில் 12 சிங்கங்கள் உயிரிழப்பு- விசாரணைக்கு உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காற்றாலை மின்சார ஊழல்... ஆவணங்களை வெளியிட்ட ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்