மோடிகேர் - மருத்துவ காப்பீடு திட்டம் ஜார்கண்டில் நரேந்திர மோடி!

ஜார்கண்டில் புதிய மருத்துவ காப்பீடு தொடக்கம் -nbsp நரேந்திர மோடி

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டத்துக்காக, மத்திய அரசு ஆண்டுதோறும் 12,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். ஆயுஷ்மன் பாரத் எனப்படும் இந்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தைத் பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட தொடங்கும் வருகிற 26-ஆம் தேதி முதல் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும் மீதி தொகையை மாநில அரசுகளும் ஏற்கும்.

இந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் அது முற்றிலும் பணமற்ற இலவச திட்டம் ஆகும் இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக்கொண்டு பிறகு கட்டணம் செலுத்திய பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி கிடையாது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு மருத்துவமனைகள் மாநில அரசின் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என சுமார் 15,000 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இதனால், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் என்றும், மோடிகேர் என்றும் புகழப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரத்து 27 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டினையும் 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டிற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டினையும் மற்றும் 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் இருந்து சிகிச்சைக்கான செலவையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டினையும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களில் உள்ள சுமார் 2 கோடியே 85 லட்சம் பேர் இனி ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லாத இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மோடிகேர் - மருத்துவ காப்பீடு திட்டம் ஜார்கண்டில் நரேந்திர மோடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாவில் நீரோடும் புதினா இறால் குழம்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்