இன்றுடன் ஒய்வு பெறும் உச்ச நீதிமன்றநீதிபதி தீபக் மிஸ்ரா.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா.

மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் தலைமை நீதிபதியாக 63 வயது தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 13 மாதங்கள் அப்பதவியில் இருந்த பிறகு, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுவார்.

1953-ஆம் ஆண்டு பிறந்த தீபக் மிஸ்ரா 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். ஒடிசா உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை, விற்பனை வரி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த வழக்குகளில் தனது வாதத்திறமையை வெளிப்படுத்தியவர்.

1996 ஆம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டே மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்பட்டார். 1997ஆம் ஆண்டு இறுதியில் தீபக் மிஸ்ரா நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009, டிசம்பர் 23-ஆம் தேதி நீதிபதி மிஸ்ரா பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2010, மே 24-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணியை அவர் தொடர்ந்தார். 2011, அக்டோபர் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுக்கொண்டார்.

 

அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்

நீதிபதி தீபக் மிஸ்ராவின் பல தீர்ப்புகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோதும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும் முக்கியமான வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகளில் பல மிகவும் பிரபலமானவை.

தில்லி நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது, சிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்தது போன்றவை தீபக் மிஸ்ராவின் முக்கிய தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை. கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஆலயத்தை பெண்களுக்கும் திறந்துவிடவேண்டும் என்பதும் நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பே.

நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களிப்பும் கொண்ட மிகவும் பிரபலமான முக்கியமான தீர்ப்புகளை பார்க்கலாம்.

24 மணி நேரத்தில் இணையத்தில் எஃப்.ஐ.ஆர் நகல்

குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும்

பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதில் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  இன்றுடன் (1 அக்டோபர் 2018) ஓய்வு பெறுகிறார்.

 

You'r reading இன்றுடன் ஒய்வு பெறும் உச்ச நீதிமன்றநீதிபதி தீபக் மிஸ்ரா. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் வருகிறது ’தேவி’யின் ஆட்டம்;மொரிசீயஸில் படப்பிடிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்