அம்பேத்கரின் சிலை உயரம் மாற்றம்: நினைவிட ஆலோசனை குழு அதிருப்தி

மகாராஷ்டிராவில் அமைக்கப்படவிருக்கும் அம்பேத்கரின் சிலையின் உயரத்தை அரசு மாற்றியுள்ளது. இதனால் நினைவிட ஆலோசனை குழுவில் அதிருப்தி எழுந்துள்ளது.

மும்பையில் இந்து மில் வளாகத்தில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு நினைவு மையம் அமைக்கப்படுமென மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது. அதற்கென ஆலோசனை குழுவும் அமைத்தது. அந்த இடத்தில் 450 கோடி செலவில் 350 அடி உயரந்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டது.

தற்போது நடைபெற்ற ஆலோசனை குழு கூட்டத்தில் அம்பேத்கர் சிலையின் உயரம் குறைக்கப்படுமென அரசு தெரிவித்துள்ளதாக தகவல் பரவுகிறது. குடியரசு சேனையின் தலைவரும் அம்பேத்கர் நினைவிட ஆலோசனை குழு உறுப்பினருமான ஆனந்த்ராஜ் அம்பேத்கர் இதை தெரிவித்துள்ளார்.

350 அடி உயரத்திற்கு பாபா சாகேப் சிலை நிறுவப்படுமென அறிவித்துவிட்டு, தற்போது 250 அடி உயர சிலை 100 அடி உயர பீடத்தில் அமைக்கப்படுமென கூறப்படுகிறது. இதை கண்துடைப்பாகவே கருதுகிறேன். 450 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்ட செலவு தற்போது 750 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்ட செலவு குறித்து மகாராஷ்டிர அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவேன் என்று ஆனந்தராஜ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

You'r reading அம்பேத்கரின் சிலை உயரம் மாற்றம்: நினைவிட ஆலோசனை குழு அதிருப்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடன் வழங்கியதில் முறைகேடு: ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ சந்தா கோச்சார் ராஜினாமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்