உலகின் முதல் வேளாண் விருதை பெறும் எம்.எஸ். சுவாமிநாதன்

M. S. Swaminathan receive first World Agri award

உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை பெறவுள்ள வேளாண்துறை வல்லுநரான சுவாமிநாதன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என பரவலாக அறியப்பட்டவர் வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது அளப்பரிய சேவைகளை பாராட்டி தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

கோதுமை புரட்சி, ஒட்டு செடி ரக உற்பத்தி என வேளாண்மை துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார்.

இந்திய உணவு மற்றும் வேளாண் சபை சார்பில் வழங்கப்படும் உலகின் முதல் வேளாண் விருதினை எம்.எஸ். சுவாமிநாதன் வரும் 26ஆம் தேதி பெற உள்ளார். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு குறித்து அந்த அரங்கில் சுவாமிநாதன் உரையாற்ற உள்ளார்.

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது மற்றும் 1 லட்சம் அமெரிக்க டாலர்களையும் பரிசாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். சுவாமிநாதனின் உலகளாவிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக பொருளாதார சூழலியலின் தந்தை என ஐ.நா புகழாரம் சூட்டியுள்ளதாக இந்திய உணவு மற்றும் வேளாண் சபை பெருமிதம் தெரிவித்துள்ளது.

You'r reading உலகின் முதல் வேளாண் விருதை பெறும் எம்.எஸ். சுவாமிநாதன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெங்கு அறிகுறி- காய்ச்சல் கண்டிப்பாக இருக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்