10 மாதத்தில் 921 என்கவுண்ட்டர் - பாஜக அரசின் சாதனை இது!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 921 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 921 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநில பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் அங்கு நடந்த என்கவுண்டட் குறித்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கடந்த பத்து மாதங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது.

அதிக என்கவுண்ட்டர்கள் பற்றி கடந்த நவம்பர் மாதமே தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை உத்தரப் பிரதேச மாநில அரசு மறுத்திருக்கிறது. இதுவரை மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

You'r reading 10 மாதத்தில் 921 என்கவுண்ட்டர் - பாஜக அரசின் சாதனை இது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புகை மண்டலமாக மாறிய சென்னை: விமான சேவை கடும் பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்