நீதிமன்ற தடையை மீறி சேவல் சண்டை ஜோர்!

ஆந்திர மாநிலத்தில்nbspஉயர்நீதிமன்ற தடையை மீறி சேவல் சண்டை அமோகமாக நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் உயர்நீதிமன்ற தடையை மீறி சேவல் சண்டை அமோகமாக நடைபெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு சேவல் சண்டை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. சேவல் சண்டையில் பலகோடி ரூபாய் சூதாட்டம் நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சங்ராந்தி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால், சேவல்களின் விலை வழக்கத்திற்கு மாறாக ரூ.10ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆனது. சில இடங்களில் அதற்கும் மேலேயும் விற்கப்பட்டது.

காரணம் சேவல் சண்டை. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். இந்த சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பந்தயமாக நிர்ணயிக்கப்பட்டது. காக்கி நாடா, அமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேவல் சண்டை களை கட்டியது.

You'r reading நீதிமன்ற தடையை மீறி சேவல் சண்டை ஜோர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்.. ஹெல்த்தி ரெஸிபி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்