பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்!

Modi govt approves 10 per cent reservation for poor in general category

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு குறைவாக உள்ள இதுவரை இட ஒதுக்கீட்டில் வராத உயர் வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும்.

ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய பல்வேறு தரப்பினருக்கு 50 சதவீதத்திற்கு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு எஞ்சிய பொது ஒதுக்கீடான 50 சதவீதத்தில் 10 சதவீதம் வழங்கப்படும்.

இந்த இட ஒதுக்கீடு மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் சலுகை பெற முடியும். இந்த இட ஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்த மசோதா நாளை நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீடு மசோதாவை தேர்தல் ஆதாயத்திற்காக மோடி அரசு கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன

You'r reading பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ. மர்ம மரணத்துக்கு சசிகலாவும் ராமமோகன ராவும்தான் பொறுப்பு- ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு நீட்டும் அதிகாரிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்