சிபிஐ இயக்குநர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா!

CBI Director Alok Verma resigns

சிபிஐ இயக்குநர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா புதிதாக நியமிக்கப்பட்ட தீயணைப்புத் துறை இயக்குநர் பதவிப் பொறுப்பை ஏற்க மறுத்து ராஜினாமா செய்து விட்டார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்தா கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் சிபிஐ இயக்குநர் பொறுப்பேற்ற 2 நாட்களில் மீண்டும் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. மத்திய தீயணைப்புத் துறை இயக்குனராக அலோக் வர்மா மாற்றப்பட்டார். இந்த பொறுப்பை ஏற்க மறுத்து அலோக் வர்மா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், இன்னுடன் என்னுடைய பணிக் காலம் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன்.

ஏனெனில் தீயணைப்புத் துறை பதவிக்கான வயது வரம்பை நான் எப்போதோ தாண்டி விட்டேன் என்று கூறி அலோக் வர்மா ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தம்மை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது குறித்தும் மத்திய அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.

You'r reading சிபிஐ இயக்குநர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்கள் குறித்து வில்லங்க விமர்சனம்.. கிரிக்கெட் வீரர்கள் ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்