துபாய்யை விட சென்னை `பெட்டர்... ஓவர் ஹாட்டால் ஹீட்டான ஏபி டிவில்லியர்ஸ்!

Chennai is better than Dubai AB de Villiers is overheated

கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை. இத்தனைக்கும் பெங்களூர் அணியில் சிறப்பான சர்வதேச வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த முறை அந்த கவலை வேண்டாம். இந்தாண்டு அணி வேறு மாதிரி இருக்கிறது. அதற்காக மிகச்சிறந்த அணி என்று சொல்ல மாட்டேன். ஆனால் அணியில் தற்போது ஒரு புத்துணர்ச்சி நிலவுகிறது. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை மட்டும் தான் இப்போது என்னால் சொல்ல முடியும்" எனப் பேசியிருந்தார் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

இப்போது இதே டிவில்லியர்ஸ், வீரர்கள் ஒரு விஷயத்தில் கஷடப்படுவதாக கூறியிருக்கிறார். அது துபாயின் வெப்ப நிலை என்றும் அவர் கூறியிருக்கிறார். வரவிருக்கும் ஐபிஎல் லீக்கில் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய சவால் என்றால் அது எமிரேட்ஸில் நிலவும் வெப்பமான சூழ்நிலைகள் தான். இதற்கு முன் இதுபோன்ற காலநிலையில் விளையாடி எனக்கு பழக்கமில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை எனக்கு சென்னை போட்டியை நியாபகப்படுத்துகிறது.

ஒருமுறை சென்னையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி நடந்தது. ஜூலை மாதம் வெயிலில் நடந்த அந்தப் போட்டியில் சேவாக், 300 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டிதான் என் வாழ்க்கையில் அதிக வெப்பநிலையில் நான் விளையாடிய போட்டி. அடுத்து இப்போது துபாய் வெப்பநிலை. இன்னும் சில மாதங்களுக்கு இந்த வெப்பமான சூழ்நிலையில் விளையாடி ஆகவேண்டும். எனவே, கடைசி 5 ஓவர்களுக்கான ஆற்றல் வீரர்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அணிகளுக்கும் இதனால் நிலைமைகள் இன்னும் சவாலானதாக மாறலாம்" எனக் கூறியிருக்கிறார்.

You'r reading துபாய்யை விட சென்னை `பெட்டர்... ஓவர் ஹாட்டால் ஹீட்டான ஏபி டிவில்லியர்ஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர்ந்து உயரும் கொரோனா... தமிழகத்தில் இன்று மட்டும் 5,660 பேருக்கு தொற்று உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்