தோனியை எடுக்காதீர்கள்.. ரூ.15 கோடியை மிச்சமாகும்!.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதேபோல், சென்னை அணியின் இறுதி ஆட்டத்துக்கு பின் பேசிய கேப்டன் தோனி, ``அணியை இளைஞர்கள் கையில் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு சென்னை அணியை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அனைத்தும் பிசிசிஐயின் முடிவை பொறுத்தே உள்ளது." என்று குறிப்பிட்டு பேசினார். அதாவது பிசிசிஐ வீரர்களுக்கான ஏலத்தை நடத்துவது குறித்து தான் இப்படி பேசியிருந்தார்.

இந்நிலையில் தோனியை அடுத்த சீசனில் எடுத்தால் அது சென்னை அணிக்கு 15 கோடி ரூபாயை நட்டப்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். பேஸ்புக் வீடியோவில் அவர் பேசுகையில், ``2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி தோனியை தக்க வைக்க கூடாது. அப்படி தக்க வைத்தால் தோனி அடுத்த மூன்று சீசன்களில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகமே. 2021 சீசனில் மட்டுமே அவர் விளையாடுவார். அதற்கடுத்த சீசன்களில் அவர் நிச்சயம் விளையாட மாட்டார். அதனால் அவரை தக்கவைத்தால் 15 கோடி ரூபாய் இழப்பு. ஒருவேளை தக்க வைக்கவில்லை என்றால் 15 கோடி ரூபாய் மிச்சம் ஆகும்" எனக் கூறியுள்ளார்.

You'r reading தோனியை எடுக்காதீர்கள்.. ரூ.15 கோடியை மிச்சமாகும்!.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈரான் மீதான கடைசி அட்டாக்... போருக்கு வித்திடுகிறாரா டிரம்ப்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்