உங்கள் சமையலறையில் இது இருக்கிறதா?

Summer-proof your kitchen

கோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் செல்ல முடியாதது ஒரு பக்கம்!
 
இரவில் தூங்க இயலாமல் கஷ்டப்படுவது இன்னொரு பக்கம்! காலநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாறுதல் செய்து கொள்கிறோம். எப்போதுமே சமையலறைக்குள் வெப்பத்தில் புழுங்கிக் கொண்டு நின்று வேலை செய்து எரிச்சலை தரும் விஷயம். கோடை என்றால் கேட்கவே வேண்டாம்! கோடைக்காலத்தில் சமையலறையில் என்னென்ன வேலைகள் செய்யப்பட வேண்டும்?
 
சுத்தம் செய்யுங்கள்:
 
கோடைக்காலம், வெளிச்சம் நன்கு சமையலறைக்குள் வருகின்ற காலம். ஆங்காங்கே இருக்கும் அழுக்குகள் அப்படியே கண்களில் தெரியும். இதுவரை கண்ணில்படாத ஒட்டடைகள், தூசி போன்றவற்றை கவனித்து சுத்தம் செய்ய இது நல்ல வாய்ப்பு
 
அதிகம் தேவைப்படாத சமையல் பொருள்கள்:
 
குளிர்காலத்தில் செய்யக்கூடிய சமையலுக்காக பருப்பு வகைகள், கிராம்பு போன்ற மணமூட்டிகள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி சமையலறைக்குள் வைத்திருப்பீர்கள். அவற்றுள் பல இப்போது தேவைப்படாமல் இருக்கலாம். அது போன்றவற்றை சமையலறையில் இருந்து எடுத்து விடுங்கள். கோடைக்கேற்ற புதிய சமையல்பொருள்களை வைக்க ஏதுவாகும்.
 
குளிர்பதன பெட்டி:
 
குளிர்காலத்தில் தேவைப்படும் என்று மீன், இறைச்சி இவற்றை வாங்கி குளிர்பதன
பெட்டியில் வைத்திருந்தால், எடுத்து சுத்தம் செய்து விடுங்கள்.
 
கண்களுக்கு இதமானவை:
 
சமையலறையில் பார்வையில் நன்றாக படும் இடங்களில் பசுமையான காய்கறிகள்,
கீரைகள் மற்றும் பழங்களை அடுக்கி வையுங்கள். அவை கண்களுக்கு இதமளிக்கும்.
 
அலமாரிகளில் இடம் உண்டாக்குங்கள்:
 
ஒன்றன்மேல் ஒன்றாக பொருள்களை குவித்து வைத்திருக்கும் பொருள்களை அலமாரிகளில் குவித்து வைத்திருக்கிறீர்களா? அவற்றுள் அடிக்கடி பயன்படுத்தாத பொருள்களை எடுத்து பொருள்கள் வைக்கும் ஸ்டோர் ரூமில் வைக்கலாம். இது அலமாரியில் போதிய இடமுண்டாக்கும். 
 
கோடைக்காலத்திற்கான ஏற்பாடுகள்:
 
கோடையில் அருந்தக்கூடிய பானங்களுக்கான பெரிய தம்ளர்கள் மற்றும் பழச்சாறு (ஜூஸ்) போடுவதற்குத் தேவையான உபகரணங்கள், ஐஸ்கிரீம் இவற்றை ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
 
சமைக்காத உணவுகள்:
 
கோடையில் எப்போதும் அடுப்பின் முன் நின்று சமையல் செய்வதை தவிர்க்கலாம். வெளியே இருக்கும் வெப்பத்திற்கு சமையல் செய்வது கடினமாக இருக்கும். ஆகவே, சமைக்கத் தேவையில்லாத சாலட் மற்றும் குளிர்ந்த உணவு பொருள்களை ஒருவேளை உண்ணலாம்.
 
மளிகை சாமான் பைகளை துவைக்கலாம்:
 
வெயில் நேரம் நாம் துவைத்துப்போடும் துணிகள் எளிதாக காய்ந்து விடும். தற்போது பிளாஸ்டிக் பைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. மளிகை சாமான் வாங்குவதற்கு பயன்படுத்தும் பைகள் அழுக்காக இருந்தால் கோடைக்காலத்தில் அவற்றை நன்றாக துவைத்து பயன்படுத்தலாம்.
 
பயண ஏற்பாடு:
 
பெரும்பாலும் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் இது. பிள்ளைகள் வெளியிடங்களுக்கு, சுற்றுலாதலங்களுக்குச் செல்ல விரும்புவர். அதிக தூரம் இல்லையென்றாலும் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வருதல் நலம். அதற்கு தேவையான பொருள்களை எப்போதும் தயாராக வைத்திருத்தல் நலம்.

You'r reading உங்கள் சமையலறையில் இது இருக்கிறதா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புன்னகைக்கு 'டாட்டா' காட்டும் இனிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்