பிள்ளைகளை கேலி செய்யாதீர்!

Avoid mocking your children: It increases their risk of becoming bullies, victims

'அப்பா, ஹேமருக்கு இங்கிலீஷ்ல என்னப்பா?" கேட்ட ஐந்து வயது மகனை, "எது தமிழ் எது இங்கிலீஷ்னு கூட தெரியாதா? சுத்தியலுக்கு தமிழ்ல என்ன தெரியுமா?" என்று கேலி செய்தார் அவன் அப்பா. அதன் பின் ஒருநாளும் அந்தப் பையன் தன் தந்தையிடம் எந்த சந்தேகமும் கேட்கவில்லை.

பெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் முரட்டு சுபாவம் கொண்டவர்களாக வளர வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. முரட்டு சுபாவம் கொண்ட அல்லது முரட்டு மாணவர்களின் கேலிக்கு இலக்காகும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் அன்பற்ற, புறக்கணிப்பு அல்லது அதிக கண்டிப்பு நிறைந்த குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இளைஞர் மற்றும் இளம்வாலிபருக்கான ஆய்விதழ் ஒன்றில் 13 முதல் 15 வயது வரையிலான பதின்ம வயதினர் 1,409 பேரை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணித்து எழுதப்பட்ட ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர் கேலிக்குள்ளாகும் பிள்ளைகள் அதுவும் பெற்றோரால் கேலி செய்யப்படுவோரின் சுயமதிப்பீடு பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையை இழந்து தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுகின்றனர். பெற்றோருடனான பிள்ளைகளின் உறவு பாதிக்கப்படுவதுடன், உடன் மாணவர்கள் மற்றும் நண்பர்களின் அரட்டலுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

குடும்பத்தில் கேலிக்குள்ளாகும் பிள்ளையின் மனதில் கோபமும் வெறுப்பும் எழுகிறது. பாடத்தை புரிந்து கொள்ள இயலாமல் கேட்கும் பிள்ளையை கிண்டல் செய்தால், அக்குழந்தை தன் தந்தை அல்லது தாய் மேலான நம்பிக்கையை இழக்கிறது. குழப்பமான மனநிலையுடன் வளர்கிறது என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பதின்ம வயது பிள்ளையின் கோபத்தினை சரியானவிதத்தில் கையாளாவிட்டால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவோ அல்லது அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்களின் இலக்காகவும் பிள்ளைகளை மாறிவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே, பிள்ளைகளை கேலி செய்யாதீர்கள்!

You'r reading பிள்ளைகளை கேலி செய்யாதீர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்