கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்

Tips to maintain Silky and Shiny Hair

'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்பது போன்ற ஆராய்ச்சி நம் தமிழ் சமுதாயத்திற்குப் பழமையானது. 'தேகம் தன்னை மூடவே கூந்தல் போதுமே' என்று நீண்ட கூந்தலை வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மிடம் தாராளம்.

சில பழக்கங்களை கடைபிடித்தால் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாமாம்.
கூந்தலில் பல வகை உள்ளன. பிரத்யேகமாக இல்லாமல், பொதுவாக கூந்தல் பராமரிப்புகளுக்கான குறிப்புகள் இவை.

உலர வைத்தல்: கூந்தலை உலர வைப்பதற்கு தினமும் ஹேர் டிரையர் பயன்படுத்த வேண்டாம். அது கூந்தலுக்கு சேதத்தை விளைவிக்கும். முடிந்த அளவு, இயற்கையாக காற்றில் உலர விடவும்.

ஷாம்பூ: தினசரி ஷாம்பூ பயன்படுத்தி குளித்தால், கூந்தலில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசை நீக்கப்படும். கூந்தல் வறண்டு காட்சியளிக்கும். ஆகவே, தினமும் ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பது அவசியமல்ல. இருநாளைக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை ஷாம்பூ பயன்படுத்தி குளிக்கவும்.

வினிகர்: வினிகரை தலையில் தேய்ப்பது ஏதோ சாலட் மணம் வீசுவது போல் தோன்றலாம். ஷாம்பூ பயன்படுத்தி குளித்த பின்னர், தலைமுடியிலும், முடிக்கூறுகள் மற்றும் தலையிலும் வினிகர் தடவுதல், கூந்தலுக்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை அளிக்கும்.

தேங்காயெண்ணெய்: கூந்தலுக்கு எண்ணெய் பூசுவது நல்லது. ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காயெண்ணெயை கூந்தலில் நன்கு குளிர தடவி, அரைமணி நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பட்டுபோல் பளபளக்கும்.

You'r reading கூந்தலை பராமரிக்க எளிய வழிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்