ஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி

Car owner was fined for not wearing helmet

நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையும் விதியை மீறுவோருக்கு மின்னணு ரசீது, பற்றுகை சீட்டுகளை தருகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்போது நேரிடும் சிக்கல்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கார் வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு இ-செலான் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் கடந்த 9ம் தேதி, நண்பர்களுடன் தமது காரில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தார். நண்பகல் 12 மணியளவில் அவரது மொபைல் போனுக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் தகவலும், விவரம் அறிவதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த இணைப்பில் சென்று பார்த்தபோது, சென்னை மடிப்பாக்கத்தில் தலைகவசம் அணியாமல் சென்ற தமிழன்பன் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, இவரது வாகன பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் சென்று கொண்டிருக்கும் தனது காரின் பதிவெண்ணை குறிப்பிட்டு மடிப்பாக்கத்தில் தலைகவசம் அணியாமல் சென்றதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. சம்பந்தப்பட்ட பெயர் ஏன் மாறியுள்ளது? என்பதையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

வாகன பதிவு எண்ணை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட சிறிய தவறு முழு கதையையும் மாற்றி விட்ட விவரம் பின்னர் தெரிய வந்துள்ளது. உண்மையில் அபராதம் விதிக்கப்பட்டவர் உடனே அபராத தொகையை செலுத்தி விட்டதாகவும் அதற்கான தகவல் தவறான பதிவெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகன பதிவு எண்ணை படம் பிடிக்கும் காமிராக்கள் துல்லியமாக செயல்படாமல் இருப்பது, அபராத ரசீதுகள் வாகன உரிமையாளரின் பழைய முகவரிக்கு செல்வது உள்ளிட்ட தவறுகள் நடந்து வருவதாகவும் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிப்பு; பக்தர்கள் பரவசம்

You'r reading ஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்